

திசையன்விளை:
திசையன்விளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரியராஜ்குமார் மற்றும் போலீசார் மன்னார்புரம் - இட்டமொழி சாலையில் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக மணல் ஏற்றி வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் கடத்தி சென்றது தெரியவந்தது. போலீசார் இதுதொடர்பாக சாத்தான்குளம் காலனியை சேர்ந்த லாரி டிரைவர் ராபின் (வயது 36) என்பவரை கைது செய்து, மணலுடன் லாரியையும் பறிமுதல் செய்தனர். மேலும் லாரி உரிமையாளர் சாத்தான்குளம் ஆர்.சி. கீழத்தெருவை சேர்ந்த கார்த்தீச பாண்டியை தேடி வருகின்றனர்.