வைகை ஆற்றில் மணல் கடத்தல்: விரட்டிச் சென்று 3 பேரை மடக்கிப் பிடித்த போலீசார்

போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர்.
போலீசார்
Published on: 

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே வைகை ஆற்றுப்படுகையில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய கும்பலை போலீசார் அதிரடியாக விரட்டி சென்று 3 பேரை கைது செய்தனர்.

சோதனை

மானாமதுரை பகுதியில் வைகை ஆற்றுப்படுகையில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

போலீசாரைக் கண்டதும், அங்கிருந்த மர்ம கும்பல் ஜே.சி.பி. எந்திரம், லாரி மற்றும் மோட்டார் சைக்கிள்களில் தப்பி ஓட முயன்றது. இதையடுத்து, போலீசார் அவர்களை விரட்டிச் சென்றனர்.

அப்போது, ஜே.சி.பி. எந்திரத்தை விரட்டிச் சென்ற போலீசாருக்கு வழிவிடாமல், மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேர் இடையூறு செய்தனர். இதையடுத்து, ஜே.சி.பி. ஓட்டுநர் மற்றும் மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேர் இந்த சம்பவத்தில் மொத்தம் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், மணலுடன் தப்பிச் சென்ற லாரி மற்றும் அதன் ஓட்டுநரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com