இரவு நேரங்களில் மணல் திருட்டு

பொன்னையாற்றில் இரவு நேரங்களில் மணல் திருட்டு நடக்கிறது.
இரவு நேரங்களில் மணல் திருட்டு
Published on

பொன்னை

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா பொன்னையாற்றில் பொன்னை பகுதிகளில் தொடர்ந்து மணல் திருட்டு நடந்து வருகிறது.

இந்த நிலையில் பொன்னை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பாலேங்குப்பம் கிராமம் அருகே பொன்னையாற்றில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மர்ம நபர்கள் இரவு நேரங்களில் பொக்லைன் எந்திரம் மூலம் 10-க்கும் மேற்பட்ட டிராக்டர்களில் மணல் திருட்டு நடந்து வருவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் இப்பகுதியில் மணல் திருட்டில் ஈடுபடும் நபர்கள் இரவு நேரங்களில் மோட்டார்சைக்கிளில் செல்லும் நபர்களை தடுத்து நிறுத்தி மிரட்டுகின்றனர்.

இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு மற்றும் அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com