திருநெல்வேலியில் மணல் திருடியவர் கைது: மினி லாரி பறிமுதல்

பழவூர், தெற்கு கருங்குளம் விலக்கு அருகே திருநெல்வேலி, புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி புவியாளர் ஆனந்தராஜ் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார்.
திருநெல்வேலி
திருநெல்வேலி மாவட்டம், பழவூர், தெற்கு கருங்குளம் விலக்கு அருகே திருநெல்வேலி, புவியியல் மற்றும் சுரங்கத்துறை, உதவி புவியாளர் ஆனந்தராஜ்(28) இன்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் ஆவரைகுளம், பருத்திவிளை தெருவைச் சேர்ந்த பெல்வின் (வயது 46) என்பவர் வந்த மினி லாரியை சோதனை செய்தார். அப்போது (கிராவல்) மணலை எந்த ஒரு அனுமதியும் இன்றி சட்ட விரோதமாக அள்ளிக் கொண்டு வந்தது தெரியவந்தது.
இதுகுறித்து ஆனந்தராஜ் (உதவி புவியாளர்), பழவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் அனிஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு பெல்வினை இன்று கைது செய்தார். மேலும் அவரிடமிருந்து 5 யூனிட் கிராவல் மண்ணையும், மினி லாரியையும் பறிமுதல் செய்து உரிய சட்ட நடவடிக்கை மேற்கொண்டார்.
Related Tags :
Next Story






