இலவசமாக வண்டல், களிமண் எடுக்க அனுமதி

விருதுநகர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கண்மாய்களில் இருந்து விவசாய நில மேம்பாடு மற்றும் மண்பாண்ட தொழில் பயன்பாட்டிற்கு வண்டல் மண் மற்றும் களிமண் எடுப்பதற்கு தகுதி வாய்ந்த கண்மாய்கள் தேர்வு செய்யப்பட்டு பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இலவசமாக வண்டல், களிமண் எடுக்க அனுமதி
Published on

விருதுநகர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கண்மாய்களில் இருந்து விவசாய நில மேம்பாடு மற்றும் மண்பாண்ட தொழில் பயன்பாட்டிற்கு வண்டல் மண் மற்றும் களிமண் எடுப்பதற்கு தகுதி வாய்ந்த கண்மாய்கள் தேர்வு செய்யப்பட்டு பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அனுமதி

இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளதாவது:- விருதுநகர் மாவட்டத்தில் விவசாய மற்றும் மண்பாண்ட தொழில் பயன்பாட்டு பணிகளுக்கு அரசாங்கம் அளித்த வண்டல் மண் மற்றும் களிமண்ணை சிறப்பு அரசிதழில் வெளியீடு செய்யப்பட்ட கண்மாய் மற்றும் குளங்களில் இருந்து இலவசமாக எடுத்துக்கொள்ள விவசாய பணி செய்யும் விவசாயிகள் தங்களுடைய நில உடமை ஆவணங்கள், பட்டா சிட்டா அடங்கல் ஆகியவற்றுடன் தொடர்புடைய கிராம நிர்வாக அலுவலர்களிடம் பெறப்பட்ட சான்றிதழை இணைத்தும் மண்பாண்ட தொழில் செய்யும் மக்கள் தமிழ்நாடு கூட்டுறவு சங்க சட்டத்தின் கீழ் தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தில் பதிவு பெற்ற உறுப்பினர் சான்றிதழை இணைத்தும் கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும் புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குனரிடம் மனு செய்து தங்களுக்கு தேவையான வண்டல் மண் மற்றும் களிமண்ணை கலெக்டரின் ஒப்புதலுடன் பெற்றுக்கொள்ளலாம்.

நடவடிக்கை

விவசாய பயன்பாட்டிற்கு நஞ்சை நிலமாக இருந்தால் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏக்கர் ஒன்றுக்கு 75 கனமீட்டரும் எக்டேர் ஒன்றுக்கு 185 கனமீட்டருக்கு மிகாமலும் புஞ்சை நிலமாக இருந்தால் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏக்கர் ஒன்றுக்கு 90 கன மீட்டரும் எக்டேர் ஒன்றுக்கு 222 கனமீட்டருக்கு மிகாமலும் வண்டல் மண் மற்றும் களிமண் எடுக்க அனுமதி வழங்கப்படும்.

மேற்படி பயன்பாட்டிற்காக வழங்கப்படும் இலவச அனுமதியை வணிக நோக்கத்துடன் வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் போலீசார் மூலம் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com