தொட்டியம் மதுரைகாளியம்மன் கோவிலில் சந்தனக்காப்பு விழா

தொட்டியம் மதுரைகாளியம்மன் கோவிலில் சந்தனக்காப்பு விழா நடந்தது.
தொட்டியம் மதுரைகாளியம்மன் கோவிலில் சந்தனக்காப்பு விழா
Published on

தொட்டியம்:

தொட்டியத்தில் உள்ள மதுரைகாளியம்மன் கோவிலில் 50-ம் ஆண்டு சந்தனக்காப்பு விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி விநாயகர், மூலவர், உற்சவர் மதுரைகாளியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களான மதுரைவீரன், கருப்பண்ணசுவாமி, காத்தவராயன், சின்னான் சுவாமிகளுக்கு சந்தனக்காப்பு மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது. பின்னர் தொட்டியம் மற்றும் அதனை சுற்றியுள்ள பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது இந்த விழாவிற்கான ஏற்பாட்டை சந்தன காப்பு விழா குழுவினர் மற்றும் லாரி டிரைவர் குழுவினர் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com