சர்வதேச விளையாட்டு போட்டிகளில் வென்ற வீரர், வீராங்கனைகள், பயிற்சியாளர்களுக்கு ஊக்கத்தொகை - சந்தீப் நந்தூரி வழங்கினார்

1,304 வீரர், வீராங்கனை மற்றும் பயிற்சியாளர்களுக்கு ரூ.34 கோடியே 5 லட்சம் மதிப்பிலான ஊக்கத்தொகையை சந்தீப் நந்தூரி வழங்கினார்.
சர்வதேச விளையாட்டு போட்டிகளில் வென்ற வீரர், வீராங்கனைகள், பயிற்சியாளர்களுக்கு ஊக்கத்தொகை - சந்தீப் நந்தூரி வழங்கினார்
Published on: 

சென்னை,

சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்கள் வென்ற 1.304 வீரர், வீராங்கனை மற்றும் பயிற்சியாளர்களுக்கு ரூ.34.05 கோடி மதிப்பில் உயரிய ஊக்கத்தொகையினை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அரசு செயலர் சந்தீப் நந்தூரி வழங்கினார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

ஊக்கத்தொகை

“இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அரசு செயலர் சந்தீப் நந்தூரி இன்று (19.11.2026) சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டரங்கில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் நடைபெற்ற விழாவில், சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்கள் வென்ற 1,304 வீரர், வீராங்கனை மற்றும் பயிற்சியாளர்களுக்கு ரூ.34 கோடியே 5 லட்சம் மதிப்பிலான உயரிய ஊக்கத்தொகை வழங்கி, பாராட்டுகளைத் தெரிவித்தார்.

இவ்விழாவில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அரசு செயலர் சந்தீப் நந்தூரி, 209 ரோலர் ஸ்கேட்டிங் விளையாட்டு வீரர்களுக்கு ரூ.5.39 கோடியும், தேசிய பள்ளி விளையாட்டுப் போட்டிகளில் வென்ற 362 மாணவ-மாணவியருக்கு ரூ.4.19 கோடியும், காமன்வெல்த் வாள்வீச்சு 12 வீரர்களுக்கு ரூ.4.10 கோடியும், பாரா தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 85 வீரர்களுக்கு ரூ.3.94 கோடியும், 57 நீச்சல் வீரர்களுக்கு ரூ.2.48 கோடியும், 55 பாரா பயிற்றுநர்களுக்கு ரூ.2.11 கோடியும், 57 தடகள விளையாட்டு வீரர்களுக்கு ரூ.1.41 கோடியும், கூடைப்பந்து 78 விளையாட்டு வீரர்களுக்கு ரூ.1.37 கோடியும், 20 சாப்ட் டென்னிஸ் வீரர்கள், 18 சைக்ளிங் வீரர்கள், பாரா பேட்மிண்டன் 14 வீரர்கள், 21 பேட்மிண்டன் விளையாட்டு வீரர்கள், டேபிள் டென்னிஸ் 17 வீரர்கள், 7 பளு தூக்குதல் விளையாட்டு வீரர்கள், 22 தேசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப் வீரர்கள்,

8 பாரா தடகள வீரர்கள், 38 காதுகேளாதோர் வாலிபால், கிரிக்கெட், செஸ் விளையாட்டு வீரர்கள், 7 செஸ் விளையாட்டு வீரர்கள், 12 குத்துச்சண்டை வீரர்கள், 6 ஸ்குவாஷ் விளையாட்டு வீரர்கள், 11 காதுகேளாதோர் செஸ் விளையாட்டு வீரர்கள், 14 வாலிபால் வீரர்கள், 6 ஜிம்னாஸ்டிக் வீரர்கள், 20 கால்பந்து வீரர்கள், 5 வூஷு வீரர்கள், 2 பாரா சைக்ளிங் வீரர்கள், 2 காமன்வெல்த் கபாடி வீரர்கள், 5 டென்னிஸ் விளையாட்டு வீரர்கள் மற்றும் 12 துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு வீரர்கள் என 1.304 வீரர், வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் உயரிய ஊக்கத்தொகையாக ரூ.34.05 கோடி வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி இ.ஆ.ப., தலைமையுரையும், இணை முதன்மைச் செயல் அலுவலர் / மிஷன் ஒலிம்பிக்ஸ் 2036 ஆ.மயில்வாகனன் இ.கா.ப., நன்றியுரையும், மாவட்ட வருவாய் அலுவலர் /பொதுநிர்வாகம் மரு.ரெ.சுமன் வரவேற்புரையும் ஆற்றினார். உடன் பொது மேலாளர் (விளையாட்டு) ல.சுஜாதா மற்றும் பதக்கங்கள் வென்ற விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், பயிற்றுநர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் கலந்து கொண்டனர்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X