

காரைக்காலை அடுத்த திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள். கடந்த சில மாதங்களாக கொரோனா ஊரடங்கு காரணமாக சனீஸ்வரர் கோவில் மூடப்பட்டது. கொரோனா பாதிப்பு குறைந்ததை தொடர்ந்து கோவில்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி நேற்று 4 வது சனிக்கிழமையையொட்டி புதுச்சேரி, தமிழகத்தில் இருந்து சாமி தரிசனம் செய்ய சனீஸ்வரர் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர்.
கடந்த 3 வாரங்களை காட்டிலும் நேற்று 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர். கொரோனா விதிமுறைகளை பின்பற்றி அவர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
---