கோவில்களில் சனிப்பிரதோஷ விழா

கலிங்கப்பட்டி பகுதியில் கோவில்களில் சனிப்பிரதோஷ விழா நடைபெற்றது.
கோவில்களில் சனிப்பிரதோஷ விழா
Published on

திருவேங்கடம்:

திருவேங்கடம் அடுத்துள்ள கலிங்கப்பட்டி பஞ்சாயத்து மகாதேவர்பட்டி மரத்தோணிஸ்வரர் கோவிலில் சனிப்பிரதோஷ விழா கொண்டாடப்பட்டது. இதேபோல் திருவேங்கடத்தில் உள்ள மீனாட்சி சொக்கநாதர் கோவிலிலும் சனிப்பிரதோஷம் கொண்டாடப்பட்டது. இதையொட்டு பகவான், அம்பாள், நந்தி பகவானுக்கும் பால், விபூதி, சந்தனம், தயிர், இளநீர், வாசனை திரவியம் உள்ளிட்ட 18-க்கும் மேற்பட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com