தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

சீர்காழியில், தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு
Published on

சீர்காழி

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி புதிய பஸ் நிலையத்தில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் குறைந்த விலையில் உணவு வகைகள் கிடைப்பதால் காலை மதியம் இருவேளைகளிலும் ஏழை-எளிய மக்கள் உணவுகளை வாங்கி உட்கொண்டு வருகின்றனர். இந்த உணவகம் அருகே கழிவுநீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் தேங்கியுள்ள கழிவுநீரில் கொசுக்கள் மற்றும் புழுக்கள் உள்ளதால் முகம் சுளிக்க வைக்கிறது.

சுகாதார சீர்கேடு

இதன்காரணமாக இந்தப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே, அம்மா உணவகம் அருகே தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றி பிளீச்சிங் பவுடர் தெளித்து சுகாதார பணிகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com