போலீஸ் நிலையத்தில் தேசிய கொடி ஏற்றிய தூய்மை பணியாளர்

தென்காசி போலீஸ் நிலையத்தில் தூய்மை பணியாளர் தேசிய கொடி ஏற்றினார்.
போலீஸ் நிலையத்தில் தேசிய கொடி ஏற்றிய தூய்மை பணியாளர்
Published on

நாடு முழுவதும் சுதந்திர தின விழா நேற்று நடைபெற்றது. தன்காசி மாவட்டத்தில் கலெக்டர் தேசிய கொடி ஏற்றினார். இதேபோல் பல்வேறு போலீஸ் நிலையங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் அந்தந்த பகுதியில் உள்ள அதிகாரிகள் தேசிய கொடி ஏற்றினார்கள்.

ஆனால் இதே நேரத்தில் தென்காசி முக்கிய போலீஸ் நிலையத்தில் அந்த போலீஸ் நிலையத்தை தினமும் தூய்மை செய்யும் தூய்மை பணியாளர் சுப்பிரமணியன் தேசிய கொடி ஏற்றினார். அப்போது போலீசார் தேசிய கொடிக்கு மரியாதை செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்த தென்காசி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகனை அதிகாரிகள் மற்றும் பலர் பாராட்டினர். சுதந்திர தின விழாவை தூய்மை பணியாளரை வைத்து தேசிய கொடியை ஏற்ற செய்தது தென்காசியில் பலரின் மனதை நெகிழச் செய்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com