திருப்பத்தூர் அருகே ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்த நபருக்கு தூய்மை பணியாளர் சிகிச்சையா? - டி.டி.வி தினகரன் டுவீட்

தூய்மை பணியாளர்கள் சிகிச்சை அளிப்பதும் அங்குவரும் பொதுமக்கள் மற்றும் நோயாளிகளின் உயிரோடு விளையாடும் செயலாகும் என டி.டி.வி தினகரன் தெரிவித்தார்.
திருப்பத்தூர் அருகே ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்த நபருக்கு தூய்மை பணியாளர் சிகிச்சையா? - டி.டி.வி தினகரன் டுவீட்
Published on

திருப்பத்தூர்,

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியதாவது:-

தூய்மை பணியாளர் சிகிச்சை

திருப்பத்தூர் அருகே குனிச்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாத காரணத்தினால் காயமடைந்த நிலையில் வந்த நபருக்கு தூய்மை பணியாளர் ஒருவர் சிகிச்சை அளிப்பது போல ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் தமிழகத்தின் சுகாதார கட்டமைப்பு எவ்வளவு மோசமான நிலையில் இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

நோயாளிகளின் உயிரோடு விளையாடும் செயல்

அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட அடிப்படை பணியாளர்கள் கூட இல்லாமல் இருப்பதும், தூய்மை பணியாளர்கள் சிகிச்சை அளிப்பதும் அங்குவரும் பொதுமக்கள் மற்றும் நோயாளிகளின் உயிரோடு விளையாடும் செயலாகும்.

வலியுறுத்தல்

எனவே, தமிழகம் முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடங்கி அரசு தலைமை மருத்துவமனைகள் வரை உரிய ஆய்வு மேற்கொண்டு, அங்கு 24 மணிநேரமும் சுழற்சி அடிப்படையில் மருத்துவ பணியாளர்கள் இருப்பதை உறுதி செய்திட வேண்டும் என சுகாதாரத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com