மின்சாரம் தாக்கி தூய்மைப் பணியாளர் உயிரிழப்பு: அரசு பொறுப்புடன் செயல்பட வேண்டும் - செல்வப்பெருந்தகை


மின்சாரம் தாக்கி தூய்மைப் பணியாளர் உயிரிழப்பு: அரசு பொறுப்புடன் செயல்பட வேண்டும் - செல்வப்பெருந்தகை
x

கோப்புப்படம் 

தூய்மைப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

சென்னை

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

சென்னை கண்ணகி நகரில் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த பெண் தூய்மைப் பணியாளர் வரலட்சுமி மின்சாரம் தாக்கி உயிரிழந்த செய்தி என்னை மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அன்றாடம் மக்களின் நலனுக்காக தன்னலமின்றி உழைக்கும் தூய்மை பணியாளர்களின் பாதுகாப்பே நகரின் பொறுப்பாக இருக்க வேண்டும். ஆனால், இவ்வாறு உயிரிழப்பது மிகுந்த வருத்தத்திற்குரியது.

இக்கஷ்டநேரத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு நான் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு குடும்பத்தினருக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறேன்.

மாநகராட்சிகள் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகள் பணியில் ஈடுபடும் தூய்மைப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இனி இத்தகைய துயர சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அரசு பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story