சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அரசாணை நகலை எரித்து தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

தூய்மைப் பணியாளர்கள் தங்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்க தமிழக அரசு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அரசாணை நகலை எரித்து தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்
தூய்மைப் பணியாளர்கள்
Published on: 

காரைக்குடி,

அரசாணை 181-ஐ ரத்து செய்ய கோரி, மாநகராட்சி அலுவலகம் முன்பு தூய்மைப் பணியாளர்கள் அரசாணை நகலை எரித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தூய்மைப் பணியாளர்கள்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சி அலுவலக வாயிலில், ஏ.ஐ.டி.யு.சி. (AITUC) தூய்மைப் பணியாளர்கள் தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை, தனியார் நிறுவனத்திற்கு 7 ஆண்டுகளுக்கு ஒப்படைக்கும் வகையில் அரசாணை 181 வெளியிடப்பட்டுள்ளது.

கோரிக்கை

இந்த அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான தூய்மைப் பணியாளர்கள் கலந்து கொண்டு, அரசாணை 181-ன் நகலைத் தீயிட்டு எரித்தனர். தொடர்ந்து, அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பிய அவர்கள், தங்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்க தமிழக அரசு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

X