தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

கூத்தாநல்லூரில் தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்
தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
Published on

திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கூத்தாநல்லூர் நகராட்சி அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் முருகேசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முருகையன், நகர தலைவர் கணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தனியார் ஒப்பந்த ஊழியர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவித்தபடி கூலியை நிலுவை தொகையுடன் வழங்க வேண்டும். தூய்மை பணியாளர்களுக்கு தேவையான உபகரணங்கள் வழங்க வேண்டும். நிரந்தர தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத் தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், மாவட்ட துணை தலைவர் ரகுபதி மற்றும் உள்ளாட்சி துறை ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com