சென்னையில் கூவம் ஆற்றில் இறங்கி தூய்மை பணியாளர்கள் போராட்டம்

போராட்டத்தின் 158-வது நாளான இன்று, கூவம் ஆற்றில் இறங்கி தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
சென்னை,
சென்னை மாநகராட்சி பகுதியில் தூய்மைப் பணியை தனியாரிடம் விடக்கூடாது, பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், போராட்டத்தின் 158-வது நாளான இன்று, கூவம் ஆற்றில் இறங்கி தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை எழும்பூரில் கூவம் ஆற்றின் உள்ளே இறங்கிய 300-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள், கோரிக்கைகள் அடங்கிய வாசகங்களை கையில் ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story






