சென்னை மாநகராட்சி ஆணையர் வீட்டை முற்றுகையிட்ட தூய்மை பணியாளர்கள்


சென்னை மாநகராட்சி ஆணையர் வீட்டை முற்றுகையிட்ட தூய்மை பணியாளர்கள்
x

தூய்மை பணியாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

சென்னை,

சென்னை மாநகராட்சி, தூய்மைப்பணியை தனியாருக்கு வழங்க கூடாது எனவும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் மண்டலம் 5, 6-வது தூய்மை பணியாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டாலும் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் அவர்கள் அவ்வப்போது திடீரென போராட்டத்தில் குதித்து வருகின்றனர். இதற்கிடையில் கடந்த 30-ம் தேதி சென்னை அண்ணா சாலையில் உள்ள தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் அருகே போராட்டத்தில் ஈடுபட தூய்மைப்பணியாளர்கள் பலர் திரண்டு வந்தனர். அவர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், தனியார் மயமாவதை கண்டித்து சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் வீட்டை முற்றுகையிட்டு தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், போராட்டக்காரர்களை கைது செய்து பஸ்சில் ஏற்றி வைத்து ஆங்காங்கே உள்ள மண்டபத்தில் தங்கவைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

1 More update

Next Story