சங்கராபுரம்: மக்காசோளம் அறுவடை இயந்திரத்தில் சிக்கி பெண் தொழிலாளி பலி

தலையில் சுமந்து வந்த மக்காச்சோள மூட்டையை கொட்டும் போது, எதிர்பாராத விதமாக அறுவடை இயந்திரத்தில் சிக்கிக்கொண்டார்.
மக்காசோளம் அறுவடை இயந்திரத்தில் சிக்கி பெண் கண்ணகி
Published on

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியை சேர்ந்தவர் கண்ணகி. இவர், விவசாய தொழிலாளி செய்து வந்தார். அங்குள்ள விவசாய நிலத்தில் மக்காசோளம் அறுவடை பணி நடந்தது.

உயிரிழந்தார்

அப்போது கண்ணகி தலையில் சுமந்து வந்த மக்காச்சோள மூட்டையை கொட்டும் போது, எதிர்பாராத விதமாக அறுவடை இயந்திரத்தில் சிக்கிக்கொண்டார். இதில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

நிவாரண நிதி

அறுவடை இயந்திரத்தில் சிக்கிப் பலியான பெண்ணின் குடும்பத்துக்கு முதல்-அமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ரூ 10/- லட்சம் அளிக்க முதல்-அமைச்சர் உத்தரவிடவேண்டும் என ரவிக்குமார் எம்.பி. தெரிவித்தார்.

சோகம்

அறுவடை இயந்திரத்தில் சிக்கி பெண் தொழிலாளி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com