மரக்கன்று வழங்கும் விழா

குலசேகரப்பேரி பள்ளியில் மரக்கன்று வழங்கும் விழா நடந்தது.
மரக்கன்று வழங்கும் விழா
Published on

திருவேங்கடம்:

ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிகளின் ஆசிரிய- ஆசிரியைகள் இணைந்த பசுமை குருவி என்ற அமைப்பு சார்பில் குலசேகரப்பேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மரக்கன்றுகள், புத்தகம் வழங்கும் விழா நடைபெற்றது. அமைப்பின் நிறுவனரும், சுவாமிநாதபுரம் ஞானசுந்தரி அம்மாள் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியருமான ராமமூர்த்தி, குலசேகரப்பேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை பரமேஸ்வரியிடம் மரக்கன்றுகளையும், புத்தகத்தையும் வழங்கினார்.

நிகழ்ச்சியில் பசுமை குருவி அமைப்பின் பொறுப்பாளர்களான குறிஞ்சாக்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் ராஜேந்திரன், அய்வாய்புலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காமாட்சி, பழங்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் நடராஜன், சாயமலை டி.டி.டி.ஏ. நடுநிலைப்பள்ளி ஆசிரியர் செல்வராஜ், கொம்பன்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் ஆறுமுகச்சாமி, சம்சிகாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியர் ஜெயகுமார், சின்ன வாகைக்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை குமுதா மற்றும் குலசேகரப்பேரி பள்ளி ஆசிரியர்களான நவநீதகிருஷ்ணன், மகேந்திரன், ராஜதுரை மற்றும் மாணவ-மாணவிகள், ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com