

பெரியகுளம் உதவி கோட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி மரக்கன்று நடும் விழா, பெரியகுளத்தில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவுக்கு உதவி கோட்ட பொறியாளர் நஸ்ரின் சுல்தானா தலைமை தாங்கினார். அப்போது பெரியகுளத்தில், தேவதானப்பட்டி சாலையில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில், உதவி பொறியாளர் சரவணன், சாலை ஆய்வாளர் சரவணன் மற்றும் சாலை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.