மரக்கன்று நடும் விழா

ஆழ்வார்திருநகரி பகுதியில் மரக்கன்று நடும் விழா நடந்தது.
மரக்கன்று நடும் விழா
Published on

தென்திருப்பேரை:

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி 100-வது பிறந்த நாளை முன்னிட்டு நெடுஞ்சாலை துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் சாலையோரம் மரக்கன்றுகள் நடப்படுகிறது. அதன்படி ஆழ்வார்திருநகரி யூனியனுக்கு உட்பட்ட ஆழ்வார்திருநகரி- நாசரேத்- சாத்தான்குளம் நெடுஞ்சாலையில் நாவல், புங்கை, வேம்பு, புளி உள்பட சுமார் 2500 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

ஆழ்வார்திருநகரி யூனியன் தலைவர் ஜனகர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார். திருச்செந்தூர் கோட்ட உதவி பொறியாளர் விஜய சுரேஷ் குமார், உதவி பொறியாளர் சிபின் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com