மரக்கன்று நடும் விழா

சிவகிரி தாலுகா அலுவலகத்தில் மரக்கன்று நடும் விழா நடந்தது.
மரக்கன்று நடும் விழா
Published on

சிவகிரி:

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு சிவகிரி நகர பஞ்சாயத்து அலுவலகம் சார்பில் தாலுகா அலுவலகம், அரசு அலுவலகங்கள், பஸ் நிலையம் மற்றும் பொது இடங்களில் மெகா துப்புரவு பணி நடந்தது. தொடர்ந்து தாலுகா அலுவலக வளாகத்தில் நகர பஞ்சாயத்து தலைவர் கோமதி சங்கரி சுந்தரவடிவேலு, துணைத்தலைவர் லட்சுமி ராமன் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். நிர்வாக அதிகாரி நவநீதகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள், பேரூராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com