

அச்சன்புதூர்:
கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு கடையநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. வனச்சரகர் சுரேஷ் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் மங்களத்துரை அனைவரையும் வரவேற்றார். கடையநல்லூர் நகரசபை தலைவர் ஹபிபூர் ரஹ்மான் மரக்கன்றுகளை நட்டு பேசினார். நிகழ்ச்சியில் வனவர் முருகேசன், அம்பலவாணர், வனக்காப்பாளர்கள் அய்யப்பன், ராமச்சந்திரன், வேட்டை தடுப்பு காவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.