மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.
மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி
Published on

மூங்கில்துறைப்பட்டு:

சங்கராபுரம் ஒன்றியம் அருளம்பாடி கிராமத்தில் கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் வெங்கட்ராமன் தலைமை தாங்கி, மரக்கன்றுகளை நட்டு வைத்தார். தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் மற்றும் மூங்கில்துறைப்பட்டு போலீசார் மரக்கன்றுகளை நட்டனர். பின்னர் அவர்கள், மரக்கன்றுகள் நடப்படுவதன் அவசியம் குறித்து கிராம மக்களிடம் தெரிவித்தனர். அரசு நிலம் மற்றும் ஏரிக்கரையில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com