மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

ஆலக்குடியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.
மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி
Published on

வல்லம்:

தஞ்சை மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழு சார்பில் நேற்று மாலை தஞ்சையை அடுத்துள்ள ஆலக்குடி கிராமத்தில் சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும்,மாவட்ட நீதிபதியான ஜெசிந்தா மார்ட்டின் தலைமையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் மாவட்ட நீதிபதி மரக்கன்றுகளை நட்டு விழாவை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், பெற்றோர்கள் குழந்தைகளை வளர்ப்பதில் கவனமாக இருக்க வேண்டும். பெண் குழுந்தைகளிடம் மற்றவர்களிடம் பழகும்போது நல்ல தொடுதல்,கெட்ட தொடுதல் குறித்த வேறுபாடுகள் பற்றி சொல்லி தர வேண்டும். பெற்றோர்கள் பெண்குழந்தையை வளர்ப்பதில் சிறந்த நண்பராக இருக்க வேண்டும். பொதுமக்களுக்கு ஏற்படும் சட்டம் மற்றும் சட்டம் சார்ந்த பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும் மாவட்ட மற்றும் தாலுகா அளவிலுள்ள மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழுவில் மனு அளித்து பயன்பெறலாம் என்றார். இ செயலர் மற்றும் சார்பு நீதிபதி இந்திராகாந்தி முன்னிலை வகித்தார். முன்னதாக அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் சுந்தரராஜன் வரவேற்றார்.இதில் வக்கில் பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் ஆலக்குடி ஊராட்சி மன்ற தலைவர் சாந்திசாமி நன்றி கூறினார். 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்களை அளித்து பயன்அடைந்தனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு நிர்வாக அலுவலர் சந்தோஷ்குமார் செய்திருந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com