சிவகிரி மலையை சுற்றிலும் மரக்கன்று நட வேண்டும்

புலிவந்தியில் சிவகிரி மலையை சுற்றிலும் மரக்கன்று நட வேண்டும் கிராம மக்கள் கோரிக்கை
சிவகிரி மலையை சுற்றிலும் மரக்கன்று நட வேண்டும்
Published on

செஞ்சி

செஞ்சி தாலுகா புலிவந்தி கிராமத்தில் உள்ள சிவகிரி மலை மீது பழமை வாய்ந்த சிவன் கோவில் உள்ளது. தற்போது சிவகிரி மலைக்கு சென்று வர, மலையை சுற்றியுள்ள பகுதியில் சுமார் 2 கி.மீ. தூரத்துக்கு தார்சாலை போடப்பட்டுள்ளது. மேலும் அனந்தபுரம், சங்கீதமங்கலம், புலிவந்தி, புதுப்பேட்டை, அணையேரி, வரிக்கல், மாத்தூர், கவரை உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் சிவகிரி மலை மீது அமைந்துள்ள சிவன் கோயிலில் பிரதோஷம் மற்றும் பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் சிவபெருமானை வழிபாடு செய்து வருகின்றனர்.

இம் மலையை சுற்றிலும் உள்ள சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலையின் இரு புறமும் உள்ள தரிசு நிலங்களில் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும். மேலும் பவுர்ணமி தினங்களில் மலையை சுற்றி கிரிவலம் வருவதற்கு வசதியாக மின் விளக்கு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என புலிவந்தி மக்கள் வனத்துறை அமைச்சருக்கு கோரிக்கை மனுவை அனுப்பி உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com