ஆவின் பால் பாக்கெட்களில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை வாழ்த்து

ஆவின் பால் பாக்கெட்களில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆவின் பால் பாக்கெட்களில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை வாழ்த்து
Published on

சென்னை,

தமிழகம் முழுவதும் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றைய தினத்தில் ஆட்டோ டிரைவர்கள், வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள், பல்வேறு நிறுவனங்கள் மற்றும் கடைகளில் வேலை செய்யும் நபர்கள் தாங்கள் பணிபுரியும் இடங்களை தூய்மையாக்கி பொரி, பழங்கள், சர்க்கரை, இனிப்புகள் உள்ளிட்டவற்றை வைத்து பூஜை செய்வார்கள்.

மேலும் வாழை மரக்கன்றுகள் கட்டியும், மலர் மாலை அணிவித்தும், பூசணிக்காய் உடைத்தும் வழிபடுவார்கள். அவர்கள் செய்யும் தொழிலுக்கு பயன்படுத்தும் அனைத்து பொருட்களுக்கும் பூஜை செய்வார்கள். பெரும்பாலானோர் தங்களின் வாகனங்களை கழுவி அதற்கு மாலை அணிவிப்பார்கள்.

சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை சிறப்பாக கொண்டாடப்படும் நிலையில், ஆவின் பால் பாக்கெட்டில் ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜை வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தீபாவளி இனிப்புகள் குறித்து பொதுமக்கள் அறிந்துக்கொள்ள ஏதுவாக, தீபாவளி சிறப்பு இனிப்பு மற்றும் காரவகைகள் என அதற்கான பட்டியலும் ஆவின் பால் பாக்கெட்டில் இடம் பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com