சரத்குமார் நாளை தனது ஆதரவாளர்களுடன் முக்கிய ஆலோசனை

சமத்துவ மக்கள் கட்சியில் இருந்து பாஜகவில் இணைந்த முக்கிய நிர்வாகிகளுக்கு தேசிய அளவில் பொறுப்புகள் வழங்கப்படாமல் இருக்கிறது.
சரத்குமார் நாளை தனது ஆதரவாளர்களுடன் முக்கிய ஆலோசனை
Published on

சென்னை,

சரத்குமார் கடந்த 2024 மார்ச் மாதத்தில் சமத்துவ மக்கள் கட்சியை கலைத்துவிட்டு பாஜகவுடன் தனது கட்சியை இணைத்துகொண்டு தொடர்ந்து பாஜகவில் இருந்து வருகிறார். இந்த நிலையில் பாஜகவின் மேலிடம் தொடர்ந்து அவருக்கு முக்கிய பொறுப்புகளை வழங்குவதாக தெரிவித்திருந்தது. அதேபோல சமத்துவ மக்கள் கட்சியில் இருந்து பாஜகவோடு இணைந்த நிர்வாகிகளுக்கும் முக்கிய பொறுப்புகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

சட்டமன்ற உறுப்பினர்கள், வேட்பாளர்கள் தேர்விலும் வாய்ப்புகள் வழங்கப்படும் என்று தெரிவித்த நிலையில் தற்போது வரைக்கும் எந்த உத்தரவாதமும் கொடுக்காத நிலையில் தேர்தல் நெருங்ககூடிய நிலையில் சரத்குமாரின் ஆதராவாளர்கள் அதிருப்தியில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நாளை தி.நகரில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார், அதன்பின்பு செய்தியாளர்களை சந்திக்கிறார். குறிப்பாக பாஜகவில் இணைந்த முக்கிய நிர்வாகிகளுக்கு தேசிய அளவில் பொறுப்புகள் வழங்கப்படாமல் இருக்கிறது. அந்த வகையில் சரத்குமாருக்கும் பொறுப்பு வழங்கப்படாமல் இருக்கிறது. நாளை தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனைக்கு பின் செய்தியாளர்கள் சந்திப்பில் தனது நிலைப்பாடு குறித்து தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com