வெள்ளி பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு சசிகலா வாழ்த்து

உலக தடகள போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு சசிகலா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வெள்ளி பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு சசிகலா வாழ்த்து
Published on

சென்னை,

18-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தில் உள்ள யூஜின் நகரில் நடந்து வருகிறது. இதில் 22 பேர் கொண்ட இந்திய தடகள அணி, ஒலிம்பிக் சாம்பியன் நீரஜ் சோப்ரா தலைமையில் பங்கேற்றுள்ளது.

இந்நிலையில், ஈட்டி எறிதல் போட்டியில் இறுதிச்சுற்று இன்று நடைபெற்றது. இதில், பங்கேற்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தனது 4-வது வீச்சில் ஈட்டியை 88.13 மீட்டர் தூரத்திற்கு வீசினார். இதன் மூலம் உலக தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் நீரஜ் சோப்ரா 2-வது இடம்பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.

உலக தடகள போட்டியில் 19 ஆண்டுகளுக்கு பின் இந்தியா பதக்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும். வெள்ளிப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் வி.கே.சசிகலா, நீரஜ் சோப்ராவுக்கு தனது வாழ்க்களை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துப் பதிவில், "இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம் பெற்று தந்த நீரஜ் சோப்ராவுக்கு இதயம் கனிந்த வாழ்த்துகள்" என்று அவர் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com