சசிகலாவை அதிமுகவில் சேர்க்க 100% வாய்ப்பே இல்லை" - அமைச்சர் ஜெயக்குமார்

சசிகலா, தினகரனை அதிமுகவில் சேர்க்க 100% வாய்ப்பே இல்லை என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சசிகலாவை அதிமுகவில் சேர்க்க 100% வாய்ப்பே இல்லை" - அமைச்சர் ஜெயக்குமார்
Published on

சென்னை,

இதுகுறித்து சென்னையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் அதிமுகவில் இருந்த எழுச்சியை இப்போதும் காண முடிகிறது. 234 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும்.

அதிமுக உள்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடுவது கிடையாது. ஒரு பெரிய அளவுக்கு வதந்தியை கிளப்பிவிடுகிறார்கள். முதலமைச்சர் கூறியது போல், அமமுக தினகரன் மற்றும் சசிகலா அதிமுகவில் இணைவதற்கான எந்த சத்தியமும் இல்லை. அவர்களை சேர்ப்பதற்கு 100 சதவீதம் வாய்ப்பே இல்லை. இதுதான் உறுதியான நிலை. இதில் எந்த மாற்றமும் கிடையாது.

நேற்று தினகரன் கூறிருந்தார், அவர்கள் தலைமையில் கூட்டணி என்று, இது ஒரு நகைசுவைகையாக தான் இருக்கிறது. தினகரனின் பேச்சை ஒரு நகைச்சுவையாகத் தான் மக்கள் எடுத்துக்கொள்வார்கள்.

கட்சியை பொறுத்தளவில் கொள்கை வேறு, கூட்டணி வேறு, எங்களது கூட்டணியில் பாஜக ஒரு அங்கம், எங்கள் தலைமையில் அவர்கள் இருக்கின்றார்கள். ஆகையால், கட்சியின் உள் விவகாரத்தில் தலையிடாமல் தான் பாஜக இருக்கிறது. அவர்கள் அப்படி கூறியிருந்தாலும், அதனை நாங்கள் நிராகரித்துவிட்டோம். அதிமுகவிற்கு என்று கொள்கை, லட்சியம் இருக்கிறது. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக நடக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com