

சென்னை,
பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையான சசிகலா, அ.தி.மு.க. கொடி கட்டிய காரில் நேற்று முன்தினம் சென்னைக்கு வந்தார். இது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவருக்கு தொண்டர்கள் திரண்டு வந்து வரவேற்பு அளித்தனர். இதனிடையே சசிகலா தனது காரில் அதிமுக கொடியை பயன்படுத்துவது குறித்து கிருஷ்ணகிரி டிஎஸ்பி, அவருக்கு நோட்டீஸ் கொடுத்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்த கூடாது என நோட்டீஸ் கொடுத்த விவகாரம் தொடர்பாக, கிருஷ்ணகிரி டிஎஸ்பி மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளதாக தெரிகிறது.