பெங்களூரு சிறையில் இருந்து 27-ந்தேதி சசிகலா விடுதலை: சிறைத்துறை தகவல்

பெங்களூரு சிறையில் இருந்து வருகிற 27-ந்தேதி சசிகலா விடுதலை செய்யப்பட உள்ளதாக அவருடைய வக்கீலுக்கு, சிறைத்துறை அதிகாரபூர்வ கடிதம் அனுப்பியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

4 ஆண்டுகளுக்கு பிறகு பெங்களூரு சிறையில் இருந்து வருகிற 27-ந்தேதி சசிகலா விடுதலை செய்யப்பட உள்ளதாக அவருடைய வக்கீலுக்கு, சிறைத்துறை அதிகாரபூர்வ கடிதம் அனுப்பியுள்ளது.

சசிகலா எப்போது விடுதலை செய்யப்படப்போகிறார் என்பது தொடர்பாக அவருடைய வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைத்துறை நிர்வாகத்துக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். அந்த கடிதத்தில் அவர், சசிகலாவுக்கு தண்டனை குறைப்பு குறித்து கோரிக்கை விடுத்து, விண்ணப்பம் செய்திருந்தார்.

அதன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்பது தொடர்பாக இதுவரை பதில் வரவில்லை. இப்போது அவருடைய தண்டனை காலம் முடிவடைகிறது. சசிகலா எப்போது விடுதலை செய்யப்படுகிறார்?, எந்த நேரத்தில் விடுதலை செய்யப்படுவார்? என்பதை தெரிவிக்கவேண்டும் என்று வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் கோரியிருந்தார்.

இதற்கு பதில் அளித்து, சிறைத்துறை அதிகாரபூர்வ கடிதம் ஒன்றை வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியனுக்கு அனுப்பியுள்ளது.

அதில் கூறப்பட்டு உள்ளதாவது:-

சசிகலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று 15-2-2017-ல் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு ரூ.10 கோடியே 10 ஆயிரம் அபராத தொகையும் விதிக்கப்பட்டது. இந்த அபராத தொகை 18-11-20-ல் கட்டப்பட்டுவிட்டது. இந்தநிலையில் அவருடைய தண்டனை காலம் முடிவடைந்துவிட்டதால் வருகிற 27-ந்தேதியன்று காலையில் விடுதலை செய்யப்படுகிறார்.

மேற்கண்டவாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

27-ந்தேதியன்று விடுதலை செய்யப்படும் சசிகலாவை, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைச்சாலை வாசலில் இருந்து, சென்னை வரையிலும் ஏராளமான கார்களில் அணிவகுத்து அழைத்து வருவதற்கு தீவிர ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com