4ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் சசிகலா

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 2 தொகுதிகளில் வேட்பாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
4ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் சசிகலா
Published on

சென்னை,

தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி, அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக்கழகம் என்ற நான்கு முனை போட்டி நிலவி வந்தது. இந்த நிலையில், வருகிற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் சசிகலாவுடன் இணைந்து போட்டியிட உள்ளதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார்.

இதனையடுத்து, அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் சசிகலா மற்றும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. ஏற்கனவே தமிழக சட்டமன்ற தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவி வந்த நிலையில், தற்போது இந்த அறிவிப்பை தொடர்ந்து தமிழக சட்டமன்ற தேர்தல் களத்தில் ஐந்து போட்டி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அ.இ.பு.த.ம.மு கழகத்தின் நான்காம் கட்ட வேட்பாளர் பட்டியலை சசிகலா வெளியிட்டார். மேலும், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 2 தொகுதிகளில் வேட்பாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன் விவரம் பின்வருமாறு;-

1. பேராவூரணி (177)- ரா.ரவி

2. ஒட்டப்பிடாரம் (தனி) (217)- அமுதா

3. அருப்புக்கோட்டை (207)- பா.தர்மராஜ்

4. பரமத்தி-வேலூர் (95)- கே.ஆர்.விஜய்சூர்யபாலாஜி

5. பல்லாவரம் (30)- ராஜ்குமார்

6. பொள்ளாச்சி (123)- மெய்குரு (எ) முருகவேல்

7. திரு.வி.க நகர் (தனி ) (15)- சி.கிறிஸ்டி

8.கோவை வடக்கு (118)- கே.ராகுல்காந்தி

9. திருச்செந்தூர் (215)- கோபாலகிருஷ்ணன்

மாற்றம் செய்யப்பட்டுள்ள புதிய வேட்பாளர்கள்:

1. விளாத்திகுளம்- செ.பொன்பாண்டி

2. உளுந்தூர்பேட்டை-ரா.உதயகுமார்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com