

மதுரை,
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் காவல்துறை தாக்கியதில் தந்தை மகன் இருவரும் உயிரிழந்தனர். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வரும் நிலையில், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் காவலர்கள் முருகன், முத்துராஜா ஆகியோரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், மேலும் 5 காவலர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர். கைதானவர்களில், உதவி ஆய்வாளர் பால்த்துரை, மற்றும் காவலர் தாமஸ் ஆகியோருக்கு உடல் நல குறைபாடு இருந்ததால், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
செல்லத்துரை, சாமத்துரை, வெயிலு முத்து ஆகியோர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ஹேமா முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அவர்களுக்கு 14 நாட்கள் காவல் பிறபிக்கப்பட்டதை தொடர்ந்து மூன்று காவலர்களும் பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில், இந்த காவலர்கள் மூன்று பேரும் மதுரை சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். பாதுகாப்பு காரணங்களால் மதுரை சிறைக்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.