சாத்தான்குளம்: காதல் விவகாரத்தில் பெண் வெட்டிக்கொலை: கடத்தப்பட்ட மகள்கள் மீட்பு - பரோட்டா மாஸ்டர் கைது

வீடு புகுந்து பெண்ணை கொன்று, அவரது 2 மகள்களை கடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
சாத்தான்குளம்: காதல் விவகாரத்தில் பெண் வெட்டிக்கொலை: கடத்தப்பட்ட மகள்கள் மீட்பு - பரோட்டா மாஸ்டர் கைது
Published on: 

தூத்துக்குடி,

சாத்தான்குளத்தில் காதல் விவகாரத்தில் சிறுமியின் தாயாரை வெட்டிக்கொன்ற ஞானபிரகாஷ் என்பவர் கைது செய்யப்பட்டார்.

வெட்டிக் கொலை

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே முதலூரில் வீடு புகுந்து மேரி ரெஜிலா என்பவர் வாலிபர் ஒருவரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். மேலும் மேரி ரெஜிலாவின் கணவர் முத்துக்கிருஷ்ணன் மற்றும் அவர்கள் மகனனான பிளஸெட் ராஜாவுக்கும் சரமாரியாக அரிவாள் வெட்டு விழுந்தது. தற்போது இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

2 மகள்கள் மீட்பு

இந்த சம்பவத்தில் 15 வயதுடைய இரு பெண் குழந்தைகள் வீட்டில் இருந்து மாயமாகவே, அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் ஆனந்தபுரம் பகுதியில் பூட்டப்பட்ட இருட்டு அறையில் இருந்து மீட்கப்பட்டனர்.

கொலை சம்பவத்திற்குப் பிறகு சிறுமிகள் கடத்திச் செல்லப்பட்டனரா? கொலையில் ஈடுபட்டது தனி நபரா? கும்பலா? என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த சூழலில் இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தென்மண்டல ஐ.ஜி.விஜேந்திர பிதரி, தட்டார்மடம் அருகே முதலூரில் மேரி விஜிலாவை ஞானபிரகாஷ் என்பவர் கொன்றுள்ளார் . கொலை செய்து விஜிலாவின் மகள்களை ஞானபிரகாஷ் கடத்திச் சென்றார். ஞானபிரகாஷின் வீட்டில் இருந்த மேரி விஜிலாவின் 2 மகள்களை காவல்துறை மீட்டுள்ளது. தப்பியோடிய ஞானபிரகாஷை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அவர் கூறி இருந்தார்.

கைது

இந்நிலையில் வீடு புகுந்து பெண் வெட்டிக்கொன்ற சம்பவத்தில் பரோட்டா மாஸ்டரான ஞானபிரகாஷ் என்பவர் கைது செய்யப்பட்டார். 15 வயது மகள் உடனான பழக்கத்தை கண்டித்ததால், சிறுமியின் தாயார் மேரி ரெஜிலாவை ஞானபிரகாஷ் வெட்டிக்கொன்றதாக மாவட்ட எஸ்.பி. சிவநாதன் விளக்கம் அளித்துள்ளார்.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com