சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து - பலி எண்ணிக்கை 10ஆக உயர்வு

சாத்தூர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10-ஆக உயர்ந்துள்ளது.
சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து - பலி எண்ணிக்கை 10ஆக உயர்வு
Published on

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் தனியார் பட்டாசு ஆலையில் செயல்பட்டு வந்தது. இதில் 50- க்கும் மேற்பட்ட அறைகளில் 80க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 1ம் தேதி காலை வழக்கம்போல் தொழிலாளர்கள் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மருந்து கலவை செய்யும் அறையில் காலை 8.30 மணி அளவில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அருகே இருந்த 8 அறைகள் இடிந்து தரைமட்டமானது. தகவல் அறிந்து வந்த சிவகாசி மற்றும் சாத்தூர் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 9 தொழிலாளர்கள் உடல் கருகி வெடித்து சிதறி உயிரிழந்தனர். சிலர் பலத்த காயமடைந்தனர்.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அழகுராஜா மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அழகுராஜா மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார். இதன் காரணமாக சாத்தூர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10-ஆக உயர்ந்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com