புதிய மின் மீட்டர் மாற்றுவதாக கூறிபெண்ணிடம் பணம் அபேஸ்

எட்டயபுரத்தில் புதிய மின்மீட்டர் மாற்றுவதாக கூறி பெண்ணிடம் பணத்தை மர்ம நபர் அபேஸ் செய்து சென்றார்.
புதிய மின் மீட்டர் மாற்றுவதாக கூறிபெண்ணிடம் பணம் அபேஸ்
Published on

எட்டயபுரம்:

எட்டயபுரத்தில் புதிய மின்மீட்டர் மாற்றுவதாக கூறி பெண்ணிடம் பணத்தை மர்ம நபர் அபேஸ் செய்து சென்றார்.

மின்மீட்டர்

எட்டயபுரம் கார்த்திகை வீதியில் சாத்தூரப்பன் மகன் தனசேகரன் என்பவருக்கு சொந்தமாக வீடு உள்ளது. இந்த வீட்டை தனசேகரன், அழகுராதாகிருஷ்ணன்- குணசுந்தரி (வயது 45) தம்பதியினருக்கு வாடகைக்கு வட்டுள்ளார். நேற்று மாலையில் குணசுந்தரியிடம் வீட்டில் இருந்தார். அப்போது, டிப்-டாப்பாக உடை அணிந்து மர்மநபர் ஒருவர் வந்தார். அவர் தான் எட்டயபுரம் மின்வாரியத்தில் இருந்து வருவதாகவும், சாத்தூரப்பன் என்ற பெயருக்கு புதிய மின் இணைப்பு பெற விண்ணப்பம் செய்துள்ளார். இதற்காக புதிய மின் மீட்டர் கொண்டு வந்துள்ளேன். ரூ.5,100 தர வேண்டும் என்று கூறினார்.

பணம் கொடுத்தார்

இதனையடுத்து குணசுந்தரி மதுரையில் வசித்து வரும் தனசேகரன் தாயார் ரத்தினம்மாளுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு மின்மீட்டர் மாற்றுவது குறித்து தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஏதும் விவரம் தெரியாத ரத்தினம்மாள், குணசுந்தரியிடம் மின்வாரிய ஊழியருக்கு பணம் கொடுக்க சொன்னதாக கூறப்படுகிறது. குணசுந்தரியும், மின்ஊழியரிடம் ரூ.5,500-ஐ கொடுத்துள்ளார். மீதி சில்லரை இல்லை என கூறி சில்லறை மாற்றி வருவதாக கூறி மர்ம நபர் சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் மின்ஊழியர் வராததால் இதுகுறித்து எட்டயபுரம் மின்வாரிய அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டார்.

ஆனால் அலுவலகத்தில் இருந்து புதிய மின் மீட்டர் மாற்ற யாரையும் அனுப்பவில்லை எனத் தெரிவித்துள்ளனர். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து குணசுந்தரி அதிர்ச்சி அடைந்தார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com