ஏலச்சீட்டு நடத்தி மோசடி: தலைமறைவான கணவர் - மனைவி, குழந்தைகளை, பொதுமக்கள் மடக்கிப் பிடித்ததால் பரபரப்பு

சென்னையில், மோசடி செய்து தப்பியோட நினைத்த சிட் பண்ட் நிறுவன உரிமையாளரின் மனைவி, குழந்தைகளை, பொதுமக்கள் மடக்கிப் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஏலச்சீட்டு நடத்தி மோசடி: தலைமறைவான கணவர் - மனைவி, குழந்தைகளை, பொதுமக்கள் மடக்கிப் பிடித்ததால் பரபரப்பு
Published on

சென்னை,

சென்னை வில்லிவாக்கம் பகுதியில், ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்ததாக, தனியார் அறக்கட்டளை ஒன்றின் மீது, பாதிக்கப்பட்டவர்கள் சென்னை காவல் ஆணையர் அலுவலகம் மற்றும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்திருந்தனர்.

இந்த நிலையில், ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்த ரங்கா ரெட்டி என்பவரின் மனைவி, நெற்குன்றத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், திருமண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக அவரது குழந்தைகளுடன் வந்துள்ளார். அப்போது, பணத்தை இழந்தவர்கள், மனைவி மற்றும் குழந்தைகளைக் கண்டதும் சுற்றி வளைத்து, ஏமாற்றிய பணம் எங்கே என கேள்வி எழுப்பினர்.

தகவலின் பேரில் வந்த போலீசார், ரங்கா ரெட்டியின் மனைவியை காவல் நிலையம் அழைத்து சென்று, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல்நிலையம் முன்பு பாதிக்கப்பட்டவர்கள் கூடியதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com