குடிசை மாற்று வாரியத்தில் வீடு வாங்கித்தருவதாக ரூ.36 லட்சம் மோசடி - இளம்பெண் கைது

குடிசை மாற்று வாரியத்தில் வீடு வாங்கித் தருவதாக கூறி 19 பேரிடம் ரூ.36 லட்சம் வாங்கி மோசடி செய்த இளம்பெண் கைது செய்யப்பட்டார்.
குடிசை மாற்று வாரியத்தில் வீடு வாங்கித்தருவதாக ரூ.36 லட்சம் மோசடி - இளம்பெண் கைது
Published on

சென்னை அம்பத்தூர் சோழபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஞானசேகரன். இவர், அரசு போக்குவரத்து துறையில் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி அருணா (வயது 36).

இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் சுந்தரி என்ற தோழி மூலம் அதே பகுதியைச் சேர்ந்த பிரியா என்ற எமிமா (30) என்பவர் அருணாவுக்கு அறிமுகம் ஆனார். அப்போது பிரியா, தான் குடிசை மாற்று வாரியத்தில் வேலை செய்வதாகவும், அங்கு அரசு ஒதுக்கும் வீட்டை வாங்கி தருவதாகவும் அருணாவிடம் ஆசை வார்த்தை கூறினார்.

அதை நம்பிய அருணா, முதல் கட்டமாக பிரியாவிடம் ரூ.30 ஆயிரம் கொடுத்துள்ளார். பின்னர் வீடு கிடைத்து விட்டதாகவும், அடுத்த கட்டமாக ரூ.6 லட்சம் தரவேண்டும் எனவும் பிரியா கேட்டார். அருணாவும், அவரிடம் ரூ.6 லட்சம் கொடுத்தார். அத்துடன் அதே பகுதியில் உள்ள மேலும் 18 பேரிடமும் இதுபோல் வீடு வாங்கி தருவதாக கூறி சுமார் ரூ.30 லட்சம் வரை பிரியா வாங்கி உள்ளார்.

ஆனால் சொன்னபடி வீடு வாங்கி கொடுக்காமலும், பணத்தை திருப்பிக் கொடுக்காமலும் பிரியா ஏமாற்றிவிட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் பாதிக்கப்பட்டவர்கள் அம்பத்தூர் குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த அம்பத்தூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அலமேலு, 19 பேரிடம் இருந்து ரூ.36 லட்சம் மோசடி செய்த பிரியாவை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com