திருவள்ளூர் மாவட்டத்தில் சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் 50 சதவீத மானியத்தில் அமைக்கும் திட்டம்

திருவள்ளூர் மாவட்டத்தில் சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் 50 சதவீத மானியத்தில் அமைக்கும் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவள்ளூர் மாவட்டத்தில் சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் 50 சதவீத மானியத்தில் அமைக்கும் திட்டம்
Published on

தமிழ்நாட்டில் உள்ள ஜவுளி மையங்களில் சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் அமைப்பதை ஊக்குவிக்கும் வகையிலும், உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துவதற்கும் சிறிய அளவிலான ஜவுளி பூங்கா அமைக்க முன்வரும் தொழில் முனைவோர்களுக்கு ரூ.2 கோடியே 50 லட்சம் வரை நிதி உதவி தமிழக அரசால் வழங்கப்படும். இவ்வாறு அமைய உள்ள ஜவுளி பூங்கா குறைந்தபட்சம் 3 தொழிற் கூடங்களுடன் குறைந்த பட்சமாக 2 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்பட வேண்டும். இத்தகைய சிறிய ஜவுளி பூங்காவின் அமைப்பு பின்வரும் உட்பிரிவுகளைக் கொண்டதாக இருக்கும். நிலம், உட்கட்டமைப்பு வசதிகள் (சாலை வசதி, சுற்று சுவர், கழிவுநீர் கால்வாய் அமைத்தல், நீர் வினியோகம், தெருவிளக்கு அமைத்தல், மின்சார வசதி மற்றும் கழிவு நீரை சுத்திகரிக்கும் நிலையம், தொலை தொடர்பு வசதி போன்றவைகள்). ஆய்வுக்கூடம், வடிவமைப்பு மையம், பயிற்சி மையம், வியாபார மையம், கிடங்கு வசதி, மூலப்பொருட்கள் மையம், குழந்தைகள் காப்பகம், உணவகம், பணியாளர்கள் விடுதி, அலுவலகம் மற்றும் இதர இனங்கள். உற்பத்தி தொடர்பான தொழிற் கூடங்கள், எந்திரங்கள் மற்றும் தளவாடங்கள்.

சிறிய ஜவுளி பூங்காவுக்கான திட்ட மதிப்பீடு என்பது மேற்குறிப்பிட்ட இனங்களாகும். எனவே 3 இனங்கள் மட்டுமே அரசின் மானியத்தை பெற தகுதியான முதலீடாக கருதப்படும். மேற்படி திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

மேலும் தகவல்களுக்கு மண்டல துணை இயக்குனர், துணி நூல் துறை, சேலம் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம்.

இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com