அறிஞர் அண்ணா விழிப்புணர்வு சைக்கிள் போட்டி

மயிலாடுதுறையில் நடந்த அறிஞர் அண்ணா விழிப்புணர்வு சைக்கிள் போட்டியை கலெக்டர் மகாபாரதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அறிஞர் அண்ணா விழிப்புணர்வு சைக்கிள் போட்டி
Published on

சைக்கிள் போட்டி

மயிலாடுதுறையில் மத்திய இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு துறை மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் உடல் ஆரோக்கியத்திற்கு சைக்கிள் ஓட்டுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு 3 பிரிவுகளாக சைக்கிள் போட்டி நடத்தப்பட்டது.

மயிலாடுதுறை அருகே தனியார் கல்லூரி மைதானத்திலிருந்து புறப்பட்ட சைக்கிள் போட்டியை மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மீனா முன்னிலை வகித்தார்.

பரிசுத்தொகை

இந்த சைக்கிள் போட்டி 5 கிலோ மீட்டர் தூரம் கடந்து மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் முடிவடைந்தது. இந்த போட்டியில் 13 வயது, 15 வயது, 17 வயதுடைய 500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். போட்டியில் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பெற்ற வெற்றியாளர்களுக்கு முறையே ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரம் பரிசுத் தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

ஆறுதல் பரிசாக 4 முதல் 10 இடங்களை பெற்ற போட்டியாளர்களுக்கு தலா ரூ. 250 மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பரிசுகளை விளையாட்டுத்துறை அதிகாரிகள் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவி உமாமகேஸ்வரி சங்கர், நகர சபை தலைவர் செல்வராஜ், ஒன்றிய குழு தலைவி காமாட்சி மூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com