14-ந் தேதிக்கு பிறகு உதவித்தொகை வழங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

2 தொகுதிகளின் இடைத்தேர்தலில் த.வெ.க. வெற்றி பிரகாசமாக இருக்கிறது என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

14-ந் தேதிக்கு பிறகு உதவித்தொகை வழங்கப்படும்
அமைச்சர் செங்கோட்டையன்
Published on

தஞ்சாவூர்,

நிதி வருமா? நிறுத்திவிட்டார்களா? என்ற அச்சம் தேவையில்லை. 19.27 லட்சம் பேருக்கு 14-ந் தேதிக்கு பிறகு உதவித்தொகை வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

உதவித்தொகை

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை கூடுதலாக பெய்ய வாய்ப்பு இருக்கிறது. 23 மண்டலங் களாக புயல் வர இருக்கிறது. அதில் 3 மண்டல புயல்கள் பெரும் வெள்ளத்தை உருவாக்க இருக்கின்ற நிலை உருவாகப் போகிறது. இது எல் நினோ நிபுணர் குழு கொடுத்த பட்டியல் ஆகும். சமூக நலத்திட்டத்தின் அடிப்படையில் இதுவரைக்கும் 35 லட்சத்து 37 ஆயிரம் பேருக்கு மாதந்தோறும் உதவித்தொகையாக ரூ.1,000, ரூ.1,500 வழங்கிக்கொண்டு இருக்கிறோம்.

14-ந் தேதிக்கு பிறகு

இந்த மாதம் வழங்க வேண்டிய அந்த தொகை ஏறத்தாழ 19 லட்சத்து 27 ஆயிரம் பேருக்கு வழங்க தாமதம் ஏற்பட்டிருக்கிறது. அதற்கான பணிகளை மேற்கொள்வதற்காக மத்திய அர சுக்கு மாநில அரசு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. வருகிற 14-ந் தேதி வரையில் விழாக் கள் இருக்கிறது. இதன் காரணமாக மத்திய அரசு 14-ந் தேதிக்கு பிறகு அந்த தொகையை அந்தந்த துறைகளுக்கு வழங்க உள்ளது. அதற்கான தொகைகளை தமிழக அரசு உடனடி யாக வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு அந்த பணிகளை நாங்களும் மேற்கொண்டு வருகிறோம். எனவே நிதி வருமா? நிறுத்தி விட்டார்களா? என்ற அச்சம் அவர்களுக்கு தேவை யில்லை. 14-ந் தேதிக்கு பிறகு அனைவருக்கும் அந்த தொகை கிடைக்கும். காவிரியில் திறந்து விடப்படும் நீர் முழுமையாக மக்களுக்கு பயன்படுகின்ற அளவிற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.

புகழின் உச்சத்தில்...

இன்றைக்கு முதல்-அமைச்சர் விஜய்க்கு இருக்கிற செல்வாக்கு அபாரமான செல்வாக்கு. ஒரு சிறந்த ஆட்சியை தருகிறார். எல்லோரும் பாராட்டுகிறார்கள். ஒரு நேர்மையான ஆட்சியை தருகிறார். ஒளிவு மறைவில்லாமல் இந்த ஆட்சி நடக்கிறது என்ற நிலை மக்கள் மனதில் இருக்கிறது. முதல்-அமைச்சருடைய புகழ் உச்சத்தில் இருக்கிறது.

2 தொகுதிகளின் இடைத்தேர்தலில் த.வெ.க. வெற்றி பிரகாசமாக இருக்கிறது. அ.தி.மு.க. வென்ற தொகுதிகளாக இருந்தாலும் இப்போது 3-வது இடத்தில் தான் இருக்கிறார்கள். 2-வது இடம் கூட இல்லை. அது ஒரு குரூப்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com