நாமக்கல் கோட்டை நகராட்சி பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

நாமக்கல் கோட்டை நகராட்சி பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
நாமக்கல் கோட்டை நகராட்சி பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
Published on

நாமக்கல் நகராட்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் கடந்த 1985-ம் ஆண்டு 10-ம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நாமக்கல்லில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது.

முன்னாள் மாணவர்கள் பல ஆண்டுகளுக்கு பிறகு ஒருவரை ஒருவர் பார்த்ததால், மனம்விட்டு பேசி மகிழ்ந்தனர். தாங்கள் படிக்கும்போது இருந்த பள்ளியின் தோற்றம் தற்போது மாறியிருந்தாலும், தாங்கள் படித்த வகுப்பில் அமர்ந்தும், விளையாடிய மைதானத்தில் நடந்தும் தங்களது பள்ளி வாழ்க்கையின் மலரும் நினைவுகளைமகிழ்ச்சியோடு பரிமாறிகொண்டனர். மேலும் தங்களுக்கு கல்வி பயிற்றுவித்த ஆசிரியர்களையும் கவுரப்படுத்தினர். பள்ளியின் தற்போதைய மாணவ, மாணவிகள் விளையாட்டு துறையில் பல வெற்றிகள் பெற அவர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை நன்கொடையாக அளித்தனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வாட்ஸ்-அப் குழு அட்மின் நிக்கல்சன், செல்வம், சுப்ரமணி ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் புவனேஸ்வரி நன்றிகூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com