பள்ளிக்கூட ஆண்டு விழா

ஸ்ரீவைகுண்டம் அருகே பள்ளிக்கூட ஆண்டு விழா நடைபெற்றது.
பள்ளிக்கூட ஆண்டு விழா
Published on

ஸ்ரீவைகுண்டம்:

ஸ்ரீவைகுண்டம் அருகே பேட்மாநகரத்தில் உள்ள எம்.எம். மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் 25-வது ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு எம்.எம். அறக்கட்டளை நிர்வாகத்தினர் எஸ்.எம்.பி.சாகுல்ஹமீது, எஸ்.அப்துல் காதர் ஆகியோர் தலைமை தாங்கினர். பள்ளியின் முதல்வர் எல்.பெல்சியா ரோஸி ஆண்டு அறிக்கை வாசித்தார்.

விழாவில் படிப்பு, விளையாட்டு உள்பட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

மாணவ- மாணவிகளின் நடனம், பாட்டு, நாடகம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட சுமார் 2000 பேர் பங்கேற்றனர்.

விழா ஏற்பாடுகளை பள்ளி செயலாளர் விஜய் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com