பள்ளி மாணவ, மாணவிகள் களப்பயணம்

பள்ளி மாணவ, மாணவிகள் களப்பயணம் மேற்கொண்டனர்.
பள்ளி மாணவ, மாணவிகள் களப்பயணம்
Published on

பணகுடி:

பணகுடி திரு இருதய மேல்நிலைப்பள்ளி மற்றும் அகத்தியமலை இயற்கை பாதுகாப்பு இயக்கம் சேர்ந்து பள்ளி மாணவ, மாணவிகள் களப்பயணம் மேற்கொண்டனர். கன்னியாகுமரி மாவட்டம் புத்தளம் மற்றும் மணக்குடி பகுதியில் உள்ள வெளிநாட்டு பறவைகள் பற்றி ஆய்வு மேற்கொண்டனர். மேலும் மணக்குடியில் உள்ள அலையாத்தி காடுகள் பற்றிய ஆய்விற்கான படகில் சென்று பார்வையிட்டனர்.

பள்ளி தலைமையாசிரியர் அருள் சகோதரர் கஸ்மீர் மேற்பார்வையில் ஆசிரியர் ஆனந்த், ஆசிரியை ஜெயா, அகத்தியமலை இயற்கை பாதுகாப்பு இயக்க அமைப்பு ஒருங்கிணைப்பாளர் மரிய அந்தோணி ஆகியோர் அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com