ரூ.16.85 லட்சத்தில் பள்ளி கட்டிடம்

உங்கரானஅள்ளி ஊராட்சி உத்தனூரில் ரூ.16.85 லட்சத்தில் கட்டப்பட்ட பள்ளி கட்டிடத்தை கோவிந்தசாமி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
ரூ.16.85 லட்சத்தில் பள்ளி கட்டிடம்
Published on

பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிக்குட்பட்ட உங்கரானஅள்ளி ஊராட்சி உத்தனூர் கிராமத்தில் ரூ.16.85 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு 2 வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு கோவிந்தசாமி எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார். பின்னர் அவர் மாணவ-மாணவிகளுக்கு இனிப்பு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் வேடியப்பன், ஒன்றிய குழு உறுப்பினர் அஞ்சலி வேணு, தலைமை ஆசிரியர் துளசியம்மாள், கிராம நிர்வாக அலுவலர் சரவணன், ஒப்பந்ததாரர் வேலு, கட்சி நிர்வாகிகள் முனுசாமி, வடிவேல், மாது, பெரியண்ணன், கிருஷ்ணன், சேட்டு, தங்கமணி, வெங்கடேஷ், காவேரி, சரஸ்வதி, நிர்மலா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com