பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்

நாச்சியார்கோவில் அருகே பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்
Published on

திருவிடைமருதூர்;

கும்பகோணம் அருகே உள்ள ஒரு பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி செம்மங்குடியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றார். சில தினங்களில் இந்த மாணவி மாயமானார். இதனால் நாச்சியார்கோவில் போலீசில் உறவினர்கள் புகார் செய்தனர். இதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் மாணவியை வெளியில் அழைத்துச் சென்று மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக நன்னிலம் திருமெய்ச்சூர் கட்டளை தெருவை சேர்ந்த சங்கர் மகன் அஜய்குமார்(வயது20) என்பவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

X

Daily Thanthi
www.dailythanthi.com