பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மேஸ்திரி போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை
Published on

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தை அடுத்த சிறுகரும்பூர் கிராமத்தில் புதுத்தெருவில் வசித்துவரும் மாணிக்கம் என்பவரின் மகன் மகேந்திரன் (வயது 48), கட்டிட மேஸ்திரி. இவர் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் ஆசை வார்த்தைகள் கூறி, பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மாணவியின் தாயார் காவேரிப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அருள்மொழி போக்சோவில் வழக்குப்பதிவு செய்து மகேந்திரனை கைது செய்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com