பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி கைது

போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி கைது
Published on

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் ஊதியூர் அருகே எல்லப்பாளையம்புதூர் பகுதியை சேர்ந்தவர் தினகரன் (வயது 35). கூலித்தொழிலாளி. இவர், 11 வயது பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், காங்கயம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் காங்கயம் அனைத்து மகளிர் போலீசார், தினகரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com