பள்ளி மாணவிகள் சாதனை

தடகள போட்டியில் பள்ளி மாணவிகள் சாதனை படைத்தனர்.
பள்ளி மாணவிகள் சாதனை
Published on

தென்காசியில் மாவட்ட அளவிலான தடகள விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் தென்காசி கிரீன் பார்க் மெட்ரிக்குலேசன் பள்ளி 6-ம் வகுப்பு மாணவி பிரியங்கா நீளம் தாண்டுதலில் (தனிநபர் செயல் திறன்) முதல் பரிசும், 9-ம் வகுப்பு மாணவி சுபாஷினி 300 மீட்டர் ஓட்டத்தில் 2-ம் பரிசும், 5-ம் வகுப்பு மாணவி சமீரா பாத்திமா 50 மீட்டர் ஓட்டத்தில் 3-வது பரிசும் பெற்றனர்.

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் சான்றிதழும், கோப்பையும் பரிசாக வழங்கினார். மேலும் மாவட்ட அளவில் வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவிகளை பள்ளி தாளாளர், செயலர், முதல்வர், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள், மற்றும் வகுப்பு ஆசிரியர்கள் பாராட்டினார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com